சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம்: இந்தியா, பாகிஸ்தானுக்கு உலக வங்கி அறிவுறுத்தல்

சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படியும், இருதரப்பினரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படியும் செயல்படுமாறு

சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படியும், இருதரப்பினரும் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின்படியும் செயல்படுமாறு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாம் மீது கடந்த 18-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் பலியாகினர்.
இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்தபோதிலும் அதை அந்நாட்டு அரசு மறுத்து வந்தது. இது இந்தியாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதன்படி, முதல்கட்ட நடவடிக்கையாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே 6 நதிகளைப் பகிர்ந்து கொள்வதற்கான சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உள்ள தண்ணீரை மட்டுமே பாகிஸ்தானுக்கு வழங்க முடியும் என்று தில்லியில் அண்மையில் நடைபெற்ற சிந்து நதி நீர்ப் பங்கீட்டு ஆணையத்தின் ஆய்வுக் கூட்டத்தில் மோடி தெரிவித்திருந்தார்.
இதற்கு அடுத்த நாளே, கடந்த 58 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு உறுதுணையாக இருந்த உலக வங்கியின் கவனத்துக்கு பாகிஸ்தான் கொண்டு சென்றது.
இந்நிலையில் சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உலக வங்கி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அந்த வங்கியின் செய்தித் தொடர்பாளர், பிடிஐ செய்தியாளரிடம் புதன்கிழமை தெரிவித்ததாவது: சிந்து நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கொண்டுள்ள நிலைப்பாட்டை எங்களுக்குத் தெரிவித்தன.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி செயல்படுமாறு இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com