தில்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: விதிமுறைகள், வரிவிலக்குகள் குறித்து இறுதி முடிவு

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்களைத் தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட வேண்டிய வரி விகிதங்களைத் தீர்மானிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை (செப்.30) நடைபெற உள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்கு வகை செய்யும் ஜிஎஸ்டி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, இச்சட்டத்தின் கீழ் வரி விதிக்கப்பட வேண்டிய பொருள்கள், வரிவிதிப்பின் அளவு, வரிவிலக்கு அளிக்க வேண்டிய பொருள்கள் உள்ளிட்டவை குறித்து முடிவு செய்வதற்கான ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டது. மத்திய நிதியமைச்சர் தலைமையின் கீழ் இயங்கும் இந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் வருவாய்த்துறை இணையமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் அல்லது மாநில அரசுகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் முதல் கூட்டம் தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நிறுவனங்களை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தல், பணம் திருப்பி அளித்தல், பணம் செலுத்துதல், சரக்குகளுக்கு வரிவிலக்கு அளித்தல் ஆகியவை தொடர்பான விதிகள் இறுதி செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி விதிகள் இறுதி செய்யப்படும்.
மேலும், ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்துவதால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடு செய்வது குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட உள்ளது' என்றார்.

ஜிஎஸ்டி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்:நாடாளுமன்ற குழுவிடம் ஜேட்லி இன்று விளக்கம்
ஜிஎஸ்டி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெள்ளிக்கிழமை விளக்கம் அளிக்க உள்ளார்.
நிதி மற்றும் பெருநிறுவனங்கள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவுடன் ஜிஎஸ்டி விவகாரம் குறித்து தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
அருண் ஜேட்லி தலைமையிலான அந்தக் குழுவில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் உள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஜேட்லி விளக்கம் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com