கிருஷ்ணர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து: பிரசாந்த் பூஷணுக்கு எதிராக வழக்கு

பகவான் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவு செய்ததாக பிரபல வழக்குரைஞர் பிரசாந்த்
கிருஷ்ணர் குறித்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்து: பிரசாந்த் பூஷணுக்கு எதிராக வழக்கு

லக்னௌ: பகவான் கிருஷ்ணர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளமான டுவிட்டரில் பதிவு செய்ததாக பிரபல வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு எதிராக உத்தரப் பிரதேச காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மகளிர் பாதுகாப்புப் படை என்ற தனிக் காவல் பிரிவை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் உருவாக்கினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது ஒன்றே இந்தக் காவல்துறைப் பிரிவின் முதன்மைப் பணியாகும்.
இந்நிலையில், இந்த நடவடிக்கையை விமர்சிக்கும் வகையில் பிரசாந்த் பூஷண் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், "ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். ஆனால், பகவான் கிருஷ்ணர் இளம் பெண்களை ஈவ் டீசிங் செய்தவர். கிருஷ்ணருக்கு எதிரான மகளிர் பாதுகாப்புப் படை என்று தனிக் காவல் பிரிவை அழைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு தைரியம் இருக்கிறதா?' என்று பிரசாந்த் பூஷண் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானதைத் தொடர்ந்து, டுவிட்டரில் பிரசாந்த் பூஷண் வெளியிட்ட மற்றொரு பதிவில், "மகளிர் பாதுகாப்புப் படை குறித்த எனது கருத்து திரிக்கப்பட்டுவிட்டது. மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல' என்று குறிப்பிட்டிருந்தார்.

 Romeo loved just one lady,while Krishna was a legendary Eve teaser.Would Adityanath have the guts to call his vigilantes AntiKrishna squads? https://t.co/IYslpP0ECv
    — Prashant Bhushan (@pbhushan1) April 2, 2017

Later, Bhushan clarified his remarks by saying:

    My tweet on Romeo brigade being distorted. My position is: By the logic of Romeo Brigade, even Lord Krishna would look like eve teaser.
    — Prashant Bhushan (@pbhushan1) April 2, 2017

    We have grown up with legends of young Krishna teasing Gopis.The logic of Romeo squad would criminalise this.Didnt intend to hunt sentiments
    — Prashant Bhushan (@pbhushan1) April 2, 2017

எனினும், தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பால் பக்காவும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சீஷன் ஹைதரும் தனித்தனியாக பிரசாந்த் பூஷணுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌ நகர காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பாக தில்லி காவல் துறை இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com