நாட்டில் நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல்!

நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ..
நாட்டில் நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தகவல்!

புதுதில்லி: நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது: 

நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்புத்த திட்டங்களை செய்லபடுத்தி தமிழகம் முதலிடம் வகிக்கிறது.மேலும் தமிழகத்தில் நாட்டிலேயே இல்லாத அளவாக 24,245 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செய்லபடுகின்றன. அத்துடன் 30,258 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com