வளர்ச்சி என்ற மந்திரமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்

வளர்ச்சி என்ற மந்திரமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்

வளர்ச்சி என்ற மந்திரமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

வளர்ச்சி என்ற மந்திரமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநிலம், சாஹிப்கஞ்ச் நகரில் பாய்ந்தோடும் கங்கை நதி மீது மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அடிக்கல்லை நாட்டிவிட்டு பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ச்சி என்ற மந்திரத்தால் மட்டுமே மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும். சந்தால் பர்கானா (ஜார்க்கண்டில் உள்ள பிராந்தியம்) அதிக வளர்ச்சி அடையும்போது, அந்தப் பிராந்திய மக்களின் வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும். கங்கை நதி மீது ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மேம்பாலம் ஜார்க்கண்ட் மற்றும் பிகாரை இணைக்கும். இந்தப் பாலம் அமைக்கப்பட உள்ளதன் மூலம் இரு மாநிலங்களும் வளர்ச்சி அடையும்.
இந்தப் பாலத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கால வரையறை நிர்ணயித்துள்ளார். இந்தப் பாலத்தின் கட்டுமானத்துக்காக பல இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற உள்ளனர். இந்தப் பாலம் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படும்.
நமது தேசத்தில் வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 21-ஆம் நூற்றாண்டில் இருளில் யாரும் வசிக்காத நிலை ஏற்படும் என்றார் பிரதமர் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com