யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து
யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் திடீர் சந்திப்பு

புதுதில்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

கடந்த மார்ச் 19-ம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். பதவியேற்றதும் அரசு அலுவலகங்களை சுத்தமாக பராமரிக்க உத்தரவு, பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை, விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி என பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று மாநிலத்தில் ‘அன்னபூர்ணா கேன்டீன்’ என்ற பெயரில் உணவகம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கட்சி மற்றும் நிர்வாக பிரச்சினைகள் குறித்து விவாதித்தார்.

இண்டர்-ஸ்டேட் கவுன்சில் நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமித் ஷாவுடனான அரை மணி நேர சந்திப்பில், துணை முதல்வர் யார் கேஷவ் பிரசாத் மவுரியா குறித்தும், கட்சியின் மாநில தலைமை தேர்வர்களிலிலிருந்து பெயர்களின் பட்டியல் உட்பட பல முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com