அமெரிக்காவின் போர்க்கப்பலை சுட்டுவீழ்த்துவோம்: வடகொரியா பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவின் எத்தகையை போர் கப்பல்களையும் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கொரிய

அமெரிக்காவின் எத்தகையை போர் கப்பல்களையும் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, கொரிய தீபகற்பத்தில் நிலவி வரும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட அதன் கூட்டணி நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக வட கொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை செய்து வருகிறது. இதனிடையே மேற்கு பசிபிக் கடற்பகுதியில் அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் ராணுவ ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் அதிநவீன விமான தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனை கொரிய தீபகற்ப பகுதிக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ள வடகொரியா, அமெரிக்காவின் எத்தகையை விமானம் தாங்கி போர் கப்பல்களையும் ஒரே தாக்குதலில் சுட்டு வீழ்த்த தயாராக இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து கொரிய தீபகற்பக பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com