அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்தால் ஆச்சரியம் ஏதுமில்லை: தில்லியில் ராகுலை சந்தித்த பிறகு குஷ்பு பேட்டி

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக் கொண்டால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்தால் ஆச்சரியம் ஏதுமில்லை: தில்லியில் ராகுலை சந்தித்த பிறகு குஷ்பு பேட்டி

அதிமுகவும் பாஜகவும் கூட்டணி வைத்துக் கொண்டால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தியை குஷ்பு செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை தமிழகத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி என்ற முறையில் ராகுல் காந்தியிடம் விளக்கினேன்.
அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரத்தில் மாநில முதல்வர் பழனிசாமி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோரும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் நேரடியாக தலையிட்டுள்ளதால் மக்களுக்கு அவர்களால் உரிய சேவையை ஆற்ற முடியவில்லை.
பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியினரும் ஒன்றாக இணைந்தால்தான் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
ஆனால், இந்த இரு அணிகளும் சேர்ந்து விடாமல் தடுக்கும் நடவடிக்கையிலும், இரு குழுவினருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவருவது அதிமுகவின் இரு அணியினருக்கும் இடையிலான மோதல் அல்ல. அந்த அணிகளை வைத்து சதுரங்க வேட்டையில் பாஜக ஈடுபட்டுள்ளது. இரு அணிகளிடையே பிளவை ஏற்படுத்தி தமிழகத்தில் அசாதாரணமான அரசியல் சூழலை உருவாக்கி குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்தும் திட்டத்தை பாஜக வகுத்து வருகிறது.
இத்தகைய சூழலில் தங்களின் அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துக் கொண்டாலும் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், இதுபோன்று பின்வாசல் வழியாக தமிழகத்தில் காலூன்ற முடியும் என பாஜக கருதுமானால், அது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என என்னால் உறுதியாகக் கூற முடியும் என்றார் குஷ்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com