ஜியோ வாடிக்கையாளர்களே நீங்கள் வைத்திருப்பது போஸ்ட் பெய்டா? ப்ரீ பெய்டா? அறிய ஆவலா?

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அன்லிமிடட் டாக் டைம் என்ற வசதியை சில நூறுகளில் கொடுக்க வகை செய்தது ரிலையன்ஸ் ஜியோ என்று சொன்னால் அது மிகையில்லை.
ஜியோ வாடிக்கையாளர்களே நீங்கள் வைத்திருப்பது போஸ்ட் பெய்டா? ப்ரீ பெய்டா? அறிய ஆவலா?


சென்னை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அன்லிமிடட் டாக் டைம் என்ற வசதியை சில நூறுகளில் கொடுக்க வகை செய்தது ரிலையன்ஸ் ஜியோ என்று சொன்னால் அது மிகையில்லை.

தொலைத்தொடர்பில் புதிய சகாப்தம் படைத்தது ரிலையன்ஸ் ஜியோ. இலவச அழைப்பு, இணைய வசதி என அள்ளி அள்ளித் தந்தது. ஜியோ சிம் விற்பனைக்கு வந்த புதிதில், சிம் கார்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கடை வாசலில் பல மணி நேரம் காத்திருந்தனர்.

சுமார் 6 மாத கால இலவச சலுகைகள் முடிந்து, தற்போது கட்டண அழைப்புகள் குறித்த விவரங்களையும் ஜியோ வெளியிட்டு வருகிறது. தற்போது ஜியோ நிறுவனம் வெளியிட்டிருக்கும் போஸ்ட் பெய்ட், ப்ரீ பெய்ட் கட்டண விவரங்களைப் பார்க்கும் பலருக்கும், நமது சிம் கார்டு போஸ்ட் பெய்டா, ப்ரீ பெய்டா என்ற சந்தேகம் எழுந்திருக்கும்.

சிம்கார்டு வாங்கும் போது, இப்போது எந்த சிம்மும் எந்த வகையானது என்று பிரிக்கப்படவில்லை. இலவச சலுகைகள் முடிந்த பிறகுதான் போஸ்ட் பெய்டா, ப்ரீ பெய்டா என்று பிரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பலரும், ரூ.99 கொடுத்து ப்ரைம் வாடிக்கையாளராக பதிவு செய்து, 309 கொடுத்து ரிசார்ஜும் செய்திருக்கிறார்கள்.

ஜியோ நிறுவனம் தற்போது புதிய கட்டண விவரங்களை  வெளியிட்டுள்ளது. அதில், ப்ரீ பெய்டிலும் போஸ்ட் பெய்டிலும் 309 என்ற கட்டணம் விவரம் இருக்கிறது.

எனவே, ஒரு ஜியோ வாடிக்கையாளர், தனது சிம் போஸ்ட் பெய்டா அல்லது ப்ரீ பெய்டா என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று இணையத்தில் தேடியதில், ஒரு சில வழிமுறைகள் கிடைத்துள்ளன.

அதன்படி, ஜியோவின் மை ஜியோ ஆப் வைத்திருப்போர், அதில் லாக் இன் செய்து, உங்கள் போன் எண்ணைக் க்ளிக் செய்யவும். அதில் பேலன்ஸ் - 0.00 என்று வந்தால் நீங்கள் ப்ரீப் பெய்ட் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அதே சமயம், நீங்கள் ஜியோ ஆப்பில் லாக் இன் செய்து போன் எண்ணைக் க்ளிக் செய்யும் போது அன்பில்ட் அமௌன்ட் - ரூ.0.00 என்று வந்தால் நீங்கள் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
 

ஒரு வேளை மை ஜியோ ஆப் இல்லாதவர்கள், ஜியோ இணையதளத்தில் சென்று உங்கள் எண்ணை லாக் இன் செய்தும் அறிந்து கொள்ளலாம்.

மேலும், உங்கள் பேலன்ஸை அறிந்து கொள்ளும் வசதியின் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

அதாவது, உங்கள் செல்போனில் *333# என்று ஜியோ சிம்மில் டையல் செய்தால் மெயின் பேலன்ஸ் வரும். அல்லது MBAL என்று டைப் செய்து அதனை 55333 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் உங்களுக்கு பேலன்ஸ் பற்றிய குறுஞ்செய்தி வரும். ஒரு வேளை இவ்வாறு வந்தால் அது ப்ரீ பெய்ட் எண் என்று உறுதி செய்து கொள்ளலாம்.

இல்லை என்றால், 199 என்ற எண்ணுக்கு BILL என்று குறுஞ்செய்தி அனுப்பி அதற்கு உங்கள் பில் அமௌன்ட் என்று வந்தால், ஒரு வேளை நீங்கள் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளராக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால், ஜியோ சிம் வாங்கும் போது போஸ்ட் பெய்டா, ப்ரீ பெய்டா என்று வாடிக்கையாளர்களிடம் எந்த கேள்வியும் எழுப்பப்படவில்லை. இந்த நிலையில், எதன் அடிப்படையில் ஒரு எண் போஸ்ட் பெய்ட் அல்லது ப்ரீ பெய்ட் என்று மாற்றப்பட்டது என்ற கேள்விக்கு ஜியோவிடம் இருந்து எந்த விளக்கமும் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com