வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள
வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

புதுதில்லி: வறட்சி காரணமாக தமிழக விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மாநிலத்தில் விவசாயிகளின் குறித்து தகவல்செய்யுமாறு கேட்டிருந்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு மற்றும் தனிப்பட்ட பல காரணமாகவே 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், 30 விவசாயிகள் குடும்ப பிரச்சனை காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி கொடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் செயல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசின் தகவலுக்கு கண்டனம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com