தில்லியில் மே 3-இல் தேசிய திரைப்பட விருதுகள் விழா

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் புதன்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வில்
தில்லியில் மே 3-இல் தேசிய திரைப்பட விருதுகள் விழா

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் புதன்கிழமை (மே 3) நடைபெறுகிறது. இதையொட்டி, தில்லி விஞ்ஞான் பவனில் அன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வில் விருதுக்குத் தேர்வான திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்குகிறார்.

திரைத் துறையில் சிறந்து விளங்கும் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு தேசிய விருதுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

இதையடுத்து, திரைப்பட விருதுகளுக்கு தேர்வானவர்களின் பட்டியலை கடந்த மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 'குக்கூ' பட புகழ் முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' சிறந்த தமிழ் படமாகத் தேர்வானது. சிறந்த பின்னணிப் பாடகர் சுந்தர ஐயர், சிறந்த பாடலராசிரியராக 'தர்மதுரை' படத்தில் 'எந்த பக்கம்' என்ற பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்து ஆகியோருக்கு விருது வழங்கப்படவுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்புக்கான இரண்டு விருதுகளுக்கு சூர்யா கதாநாயகனாக நடித்த '24' என்ற படம் தேர்வானது. சிறந்த திரைப்பட எழுத்தாளராக ஜி.தனஞ்செயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு மொத்தம் ஆறு விருதுகள் தமிழகத்துக்கு கிடைத்துள்ளன.

பாலிவுட் நட்சத்திரங்கள் அக்ஷய் குமார் (ருஷ்டம், ஹிந்தி) சிறந்த நடிகர், மலையாள கதாநாயகி சுரபி லக்ஷ்மி (மின்னாமின்னுங்கு, மலையாளம்) சிறந்த நடிகை, ராஜேஷ் மபூஸ்கர் (வெண்டிலேட்டர்,மராத்தி) சிறந்த இயக்குநர், பாபு பத்மநாபன் சிறந்த இசை அமைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வான திரைத் துறையினருக்கு தேசிய விருதுகள் புதன்கிழமை வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com