கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துக்கு பணியில் இணைந்த 16 வயது அரசுப் பள்ளி மாணவன்...!

சண்டிகரைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தில் ரூ.1.44 கோடி ஆண்டு வருமானத்துக்கு செவ்வாய்கிழமை பணியில் இணைந்தான்.
கூகுளில் ரூ.1.44 கோடி ஊதியத்துக்கு பணியில் இணைந்த 16 வயது அரசுப் பள்ளி மாணவன்...!

சண்டிகரின் செக்டார் 33-ல் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஹர்ஷித் ஷர்மா என்ற மாணவன் பயின்று வந்தார்.

இவர் தற்போது இன்டர்நெட் உலகில் உயரிய நிறுவனமான கூகுளில் பணியில் இணைந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் கிராஃபிக் டிசைன் பிரிவில் இணைந்துள்ளார். அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் பணியில் சேர உள்ளார்.

முதற்கட்டமாக முதல் ஒரு வருடத்துக்கு அந்நிறுவனம் இந்த மாணவருக்கு பயிற்சி அளிக்கிறது. இந்தப் பயிற்சிக் காலத்தில் மட்டும் மாதம் ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கிறது.

இதையடுத்து, பணியில் சேர்ந்த பின்பு மாதம் ரூ.12 லட்சம் வீதம் ஒரு வருடத்துக்கு ரூ.1.44 கோடி ஊதியம் அளிக்கவுள்ளது. இதற்கான பணி ஆணையை கூகுள் நிறுவனம் ஹர்ஷித்துக்கு செவ்வாய்கிழமை வழங்கியது.

இதுகுறித்து மாணவன் ஹர்ஷித் ஷர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே காலிப்பணியிடங்கள் குறித்து தேடி வந்தேன். அப்போதுதான் இந்த பணிக்காக கடந்த மே மாதம் விண்ணப்பித்தேன்.

பின்னர் ஆன்லைன் மூலமாக கூகுள் நிறுவனம் என்னை நேர்காணல் நடத்தியது. எனக்கு கிராஃபிக் டிசைனில் கடந்த 10 ஆண்டுகளாகவே மிகுந்த விருப்பம் உள்ளது. நான் இதுவரை செய்த டிசைன்களின் அடிப்படையிலேயே கூகுள் நிறுவனம் எனக்கு இந்த பணி வாய்ப்பை வழங்கியது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com