ஜம்மு-காஷ்மீரில்​ லஷ்கர் தீவிரவாத இயக்கத் தலைவன் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த துப்பாக்கிச்
ஜம்மு-காஷ்மீரில்​ லஷ்கர் தீவிரவாத இயக்கத் தலைவன் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த துப்பாக்கிச் சூட்டில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத் தலைவன் அபு துஜானா என்பவனும் மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹக்ரிபோரா கிராமத்தில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, இன்று அதிகாலை 4.30 மணி முதல் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர், அப்போது, தீவிரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரும், காஷ்மீருக்கான தளபதி அபு துஜானா என்பவனும் மற்றொரு தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ல் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய அபு துஜானா, காஷ்மீரில் லஷ்கர் அமைப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அபு துஜானாவை, கடந்த மே மாதம் இதே கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, அங்கிருந்த சில இளைஞர்கள் ராணுவ வீரர்கள் மீது கல்வீச்சு நடத்தியதாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொண்ட அபு துஜானா, பாதுகாப்புப்படையினரின் வளையத்திற்குள் இருந்து தப்பியுள்ளான்.

புர்கான் வானி இறுதிச்சடங்கிலும் கலந்து கொண்ட அவர் பாதுகாப்பு படை மீது கற்களை வீசும்படி இளைஞர்களை தூண்டிவிட்டதையடுத்து. அவரை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். அவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, பாதுகாப்பு வீரர்களால் கொல்லப்பட்டுள்ளார்.

மேலும், அப்பகுதியில் பதுங்கியுள்ள மேலும் சில தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com