பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் சீனா பயணம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை (ஆக. 1) தொடங்கும் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் (தனி பொறுப்பு) நிர்மலா சீதாராமன்
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் சீனா பயணம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை (ஆக. 1) தொடங்கும் பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் (தனி பொறுப்பு) நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை சீனா வந்தடைந்தார்.
சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை குறித்து அந்த மாநாட்டில் அவர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு செவ்வாய்க்கிழமை (ஆக.1) தொடங்குகிறது.
இந்த மாநாட்டில், சரக்குப் போக்குவரத்து, நிதிப் பரிமாற்றங்கள் போன்ற பல்வேறு துறைகளில் மின்-வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்று சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து, மாநாட்டில் வர்த்தக அமைச்சர்கள் முதல் முறையாக விவாதிப்பார்கள் என்று சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவைப் பொருத்தவரை, ஏற்றுமதி-இறக்குமதியில் நிலவி வரும் வர்த்தகப் பற்றாக்குறை குறித்த தனது கவலையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வர்த்தகப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு இந்தியா சர்ச்சைக்குரிய நிவாரணங்களைத் தேடாமல், பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று சீன வர்த்தகத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
சீனா, தைவான், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து சூரியத் தகடுகள் அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுவது குறித்த விசாரணைக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளதைக் குறிப்பிட்டே சீன அரசு இவ்வாறு கூறியுள்ளதாகக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com