காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி!

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடாகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
காவிரி மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி!

புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடாகா எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக 2007-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் உச்சநீதி மன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. இவற்றின் மீது உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் முதலில் கர்நாடக அரசின் வாதம் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, கேரள அரசின் வாதம் தொடங்கி நடந்து வந்தது. இரண்டு அரசுகளின் வாதமும் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசின் இறுதி வாதம் இன்று (புதன்கிழமை) தொடங்கியது.

நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று தமிழக அரசின் வாதம் முன்வைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது:

காவிரி கர்நாடகாவில் உற்பத்தியாகிறது என்ற ஒரே காரணத்துக்காக அம்மாநிலம் காவிரியின் மீது முழு உரிமை கொண்டாட முடியாது. கர்நாடகாவின் அணுகுமுறை காரணமாக தமிழகத்தின் இருபோக விளைச்சல் என்பது கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி விட்டது. அத்துடன் நீர் திறந்து விடாத காரணத்தினால் தமிழகத்தின் விவசாய பரப்பு என்பதும் குறைந்து விட்டது.

இவ்வாறு இன்றைய தமிழக தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டது.

வாதத்தின் பொழுது நீதிபதிகள், 'காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் காவிரி நடுவர் மன்ற தீப்பினை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதனையும் தெரிவிக்குமாறு அவர்கள் கோரினர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com