கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியா - ரஷியா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா - ரஷியா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை கையெழுத்தாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா - ரஷியா நாடுகளுக்கு இடையே திங்கள்கிழமை கையெழுத்தாகியுள்ளது.
இதுகுறித்து ரஷியாவின் ஜே.எஸ்.சி. அணுமின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6 ஆகிய அலகுகளை கட்டமைப்பது தொடர்பாகவும், அந்த அலகுகளுக்கு தேவையான உபகரணங்களை ரஷியாவிலிருந்து விநியோகம் செய்வது தொடர்பாகவும் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்திய அணுமின் கழகத்துக்கும் (என்பிசிஐஎல்), ரஷியாவின் ஜே.எஸ்.சி. அணுமின் நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன. இதன் மூலமாக, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5, 6 ஆகிய அலகுகளைக் கட்டமைக்கும் திட்டமானது, செயல்வடிவம் பெறும் நிலையை அடைந்திருக்கிறது.
மேற்குறிப்பிட்ட அலகுகளை வடிவமைக்கும் பணிகளும், அதற்குத் தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்யும் பணிகளும் தொடங்கியிருக்கின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரஷியாவுக்கு கடந்த ஜூன் 1-ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5 மற்றும் 6 ஆகிய அலகுகளை கட்டமைப்பது தொடர்பான வரைவு ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com