'நீட்' தேர்வு விலக்கு விவகாரம் ராஜ்நாத் சிங்குடன் தம்பிதுரை, விஜயபாஸ்கர் மீண்டும் சந்திப்பு

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்குப் பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை,
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன்.

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வில் (நீட்) இருந்து விலக்குப் பெறுவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நேரில் சந்தித்துப் பேசினர்.
தில்லி அக்பர் சாலையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்ற மு.தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவரிடம் 'நீட்' தேர்வு விவகாரம் குறித்து சுமார் 10 நிமிடங்கள் பேசினர்.
இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை கூறியதாவது: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தொடர்பான கோப்பு பல்வேறு துறைகளுக்குச் சென்றுவிட்டு உள்துறை அமைச்சகத்துக்கு வர உள்ளது. இதையொட்டி, இந்த மசோதாவை உடனடியாக பரிசீலித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கேட்டுக் கொண்டோம். அப்போது, உள்துறைச் செயலரிடம் கலந்தாலோசித்து தகவல் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். அரசியலமைப்பின் பொதுப் பட்டியலில் கல்வி உள்ளதால் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 'நீட்' தேர்வு முடிந்தவிட்டது. அந்தத் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால்தான் நிவாரணம் பெற மாநில அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது என்றார் தம்பிதுரை.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி , ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. மூத்த வழக்குரைஞர்களுடனும் இது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. தலைமை வழக்குரைஞரும் மேல்முறையீடு செய்வதற்கான யோசனையை அளித்துள்ளார். இதனால், இந்த விவகாரத்தை அவசர வழக்காக எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்படவுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com