வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.41 குறைவு

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.574-லிருந்து ரூ.533-ஆக, அதாவது ரூ.41 குறைக்கப்பட்டுள்ளது.
வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.41 குறைவு

தமிழகத்தில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.574-லிருந்து ரூ.533-ஆக, அதாவது ரூ.41 குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு செவ்வாய்க்கிழமை (ஆக.1) முதல் அமலுக்கு வருவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை ரூ.465.56-லிருந்து ரூ.467.35-ஆக, அதாவது ரூ.1.79 மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்கில் எவ்வளவு? வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு செவ்வாய்க்கிழமை (ஆக.1) முதல் பதிவு செய்வோருக்கு அவர்களது வங்கிக் கணக்கில் மானியத் தொகையாக ரூ.65.65 செலுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மக்களவையில் திங்கள்கிழமைபேசும்போது, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து மானியங்களையும் ஒழிக்கும் நோக்கில் மானிய எரிவாயு உருளைகளின் விலையை மாதந்தோறும் ரூ.4 என்ற அளவுக்கு உயர்த்துமாறு எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளைகளின் விலையை மாதத்துக்கு ரூ.2 வீதம் உயர்த்துமாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றை மத்திய அரசு பணித்தது. அதன்படி, எரிவாயு உருளைகளின் மீதான விலையில் ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிவாயு உருளையின் விலை மாதந்தோறும் ரூ.4 என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற மத்திய அரசின் மே 30-ஆம் தேதியிட்ட உத்தரவுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மூன்றாவது விலை உயர்வு செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டதாகும்.
இதேபோல், சர்வதேச அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, விமான எரிபொருளின் விலையை 2.3 சதவீதம் என்ற அளவுக்கு இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com