இந்திய - பாகிஸ்தான் எல்லையில் 6 மாதங்களுக்குள் நவீன வேலிகள்

ஜம்மு - காஷ்மீரை ஒட்டியுள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நவீன வேலிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள்

ஜம்மு - காஷ்மீரை ஒட்டியுள்ள இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நவீன வேலிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அமைக்கப்படும் என்று எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமைத் தளபதி கே.கே.சர்மா தெரிவித்துள்ளார்.
எல்லையில் ஊடுருவல் சம்பவங்களைத் தடுக்கவும், அத்துமீறல் நடவடிக்கைகளை முறியடிக்கவும் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கே.கே.சர்மா, இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய பிஎஸ்எஃப் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நவீன வேலிகள் அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜம்மு - காஷ்மீரை ஒட்டியுள்ள பகுதிகளில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.
இந்திய - வங்கதேச எல்லையிலும் இத்தகைய நவீன வேலிகளை அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான தளவாடங்கள் போதிய அளவு வந்தவுடன் அந்தப் பணிகள் தொடங்கும்.
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான விரிவான செயல்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com