வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது.
'ரெப்போ விகிதம்' என்றழைக்கப்படும் இந்த வட்டி விகிதம் 10 மாத இடைவெளிக்குப் பிறகு குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த விகிதம் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இது, கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைவானதாகும்.
இதன் காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அளிக்கும் வீட்டுக் கடன், வாகனக் கடன், நிறுவனக் கடன் போன்றவற்றுக்கான வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) மும்பையில் புதன்கிழமை நடத்திய நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டு, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியதாவது:
தற்போதைய பொருளாதாரச் சூழலில், வட்டி விகிதங்களைக் குறைப்பதால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் குறைவாகவே உள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, ரெப்போ வட்டி விகிதத்தில் 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டாலும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவை வரவேற்றுள்ள மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், மிதமான பணவீக்கத்துக்கும், நிலையான வளர்ச்சிக்கும் இந்த முடிவு வழிவகுக்கும் என்றார்.
எனினும், ரெப்போ வட்டி விகித மாற்றத்தை உடனடியாகப் பிரதிபலிக்கக் கூடிய மும்பை பங்கு வர்த்தகம் புதன்கிழமை 98.43 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்கு சந்தையின் நிஃப்டியும் 33.15 புள்ளிகள் குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com