இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு மாலையே முடிவு அறிவிக்கப்படும்.
இன்று குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாலையில் முடிவு தெரியும்

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிந்த பிறகு மாலையே முடிவு அறிவிக்கப்படும்.
தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் எம்.பி.க்கள் மட்டுமே வாக்களிக்க இருக்கின்றனர். எனவே நாடாளுமன்றத்தில் வைத்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு 7 மணியளவில் முடிவு அறிவிக்கப்ப டும்.
ஆளும் பாஜக கூட்டணிக்கு மக்களவையில் போதிய அளவு பெரும்பான்மை இருப்பதால் வெங்கய்ய நாயுடு இத்தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார். இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக எம்.பி.க்களுக்கு பிரத்யேக பேனா அளிக்கப்படும். அதனைப் பயன்படுத்திதான் வாக்குச் செலுத்த வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு முறையில் இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கட்சிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 790 வாக்குகள் உள்ளன. அவற்றில் மக்களவையில் இரு இடங்களும், மாநிலங்களவையில் ஓரிடமும் காலியாக உள்ளன. நீதிமன்ற உத்தரவு காரணமாக பாஜக எம்.பி. சேதி பாஸ்வான் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. 545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பாஜகவுக்கு மட்டும் 281 எம்.பி.க்கள் உள்ளனர். பாஜக கூட்டணியில் 338 எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு 58 எம்.பி.க்களும், காங்கிரஸ் கட்சிக்கு 57 உறுப்பினர்களும் உள்ளனர். எனினும் பாஜகவுக்கு பெரும்பான்மையில்லை. அது தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
இரு அவை உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாக ஒரு வாக்கைப் பெறும் வேட்பாளர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். இப்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com