மும்பையில் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரசுப் போக்குவரத்துக் கழகமான பெஸ்ட் (BEST) - இல் பணியாற்றும் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கு
மும்பையில் பேருந்துகள் இன்று வேலை நிறுத்தம்


மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரசுப் போக்குவரத்துக் கழகமான பெஸ்ட் (BEST) - இல் பணியாற்றும் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சம்பள உயர்வு மற்றும் முதல் வாரத்தில் சம்பளம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. பத்தாம் தேதிக்குள் சம்பளத்தை கொடுத்து விடுவதாக போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ள போதும் இன்று திட்டமிட்டபடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மும்பை கார்ப்பரேஷன் தங்களது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் ஆகஸ்ட் 6 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்யப்படும் என்று தொழிலாளர்கள் சங்கம் அச்சுறுத்தியது.

இதுகுறித்து பெஸ்ட் தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஷஷங் ராவ் கூறுகையில், நாங்கள் எங்களது உரிமைகளுக்காக போராடுகிறோம், நாங்கள் இரவும் பகலும் வேலை செய்கிறோம், எங்கள் ஊதியத்திற்கு உரிமை இருக்க வேண்டும். இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிக்கும் 36 ஆயிரம் தொழிலாளர்கள் நாங்கள் ஒரு சக்தியாக உள்ளோம், நாங்கள் மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம், ஆனால், எங்கள் பிரச்சனைகளுக்கு எந்தவொரு தீர்வும் இல்லை, நாங்கள் எங்களது உரிமைகளை தான் கோருகிறோம் என்று கூறினார். மேலும் எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

36 ஆயிரம் ஊழியர்களின் ஒன்பது தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இன்று, மும்பை மேயருடன் தொழிற்சங்கத்தினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஒவ்வொரு மாதமும் 10 தேதி சம்பளம் வழங்கப்படுவதற்கான முக்கிய கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.

ஆனால், தங்கள் கோரிக்கைகள் எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்வதாக தொழிற்சங்கம் பிடிவாதமாக உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com