பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட தில்லி வந்துள்ள பாகிஸ்தான் சகோதரி கோமர் மோசின் ஷேக்!

சகோதர உறவின் புனிதமான பந்தத்தை விளக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை கட்டி வரும்
பிரதமர் மோடிக்கு ராக்கி கட்ட தில்லி வந்துள்ள பாகிஸ்தான் சகோதரி கோமர் மோசின் ஷேக்!

புதுதில்லி: சகோதர உறவின் புனிதமான பந்தத்தை விளக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கியை கட்டி வரும் பாகிஸ்தான் பெண் கோமர் மோசின் ஷேக் தில்லி வந்துள்ளார்.

சகோதர உறவின் புனிதமான பந்தத்தை விளக்கும் ரக்சா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.

ரக்சா பந்தன் பண்டிகை அண்ணன் தங்கையின் புனிதமான பந்தத்தையும், பாசத்தையும் உணர்த்தும் ஒரு உணர்வுப்பூர்வமான திருநாளாகும். பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானில் கோமர் மோசின் ஷேக் என்ற உடன் பிறவா சகோதரி ஒருவர் இருக்கிறார். அந்தப் பெண்மணிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மோடி அழைப்பு விடுத்ததின் பேரில் மோடிக்கு ராக்கி கயிறு கட்டுவதற்காக தில்லி வந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி பிரதமராக இருப்பதால், வேலை பளு காரணமாக அழைக்க மறந்திருக்கலாம் என்று இருந்தேன். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அழைப்பு விடுத்தார், இதையடுத்து ரக்சா பந்தனுக்கான ராக்கியை தயாரிக்க ஆரம்பித்தேன் என்றும் எனக்கு மோடியின் மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.

மேலும், தான் மோடிக்கு முதல் ரக்சா பந்தன் ராக்கி கயிறு கட்டும்போது, அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தொழிலாளியாக இருந்தார். அவருடைய தெளிவான கடின உழைப்பு மற்றும் பார்வை அவரை பிரதமர் அளவுக்கு உயர்த்தி உள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தானை சேர்ந்த அந்த பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராகியை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com