மரங்களுக்கு ராக்கி கட்டிய மாநில முதல்வர்!

சகோதரத்துவத்தினை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா கொண்டாடப்படும் இந்த நாளில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும்... 
மரங்களுக்கு ராக்கி கட்டிய மாநில முதல்வர்!

பாட்னா: சகோதரத்துவத்தினை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா கொண்டாடப்படும் இந்த நாளில், பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும் மரங்களுக்கு ராக்கி  கட்டிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சகோதரத்துவத்தின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் திருவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் பொருட்டு பிகாரில் நடந்த விழா ஒன்றில், மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் இருவரும் அங்கிருந்த மரம் ஒன்றின் கிளைகளில் ராக்கி கட்டினார்கள். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது நிதிஷ் குமார் கூறியதாவது:

பீகாரில் மரங்களைக் காத்து, நாட்டின் பசுமை போர்வைப் பரப்பை அதிகரிக்க செய்ய வேண்டிய முயற்சிகளுக்கு இது ஒரு அடையாளம். அத்துடன் சூழலை காக்கவும் இது அத்தியாவசியமாகிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் இருந்தே பீகாரின் பசுமைப் பரப்பு பெருகி வருகிறது. இது ஒரு நல்ல மாற்றமுமாகும். மக்களும் நம்முடன் கை கோர்த்து, இதற்காக பணியாற்ற வேண்டும் .

ஒருங்கிணைந்த பிஹாரில் 17% காடுகளிருந்தன. கடந்த 2000-ஆமது ஆண்டு பீகாரில் இருந்து ஜார்கன்ட்  பிரிக்கப்பட்டதில், நமது வன வளம் குறையலாயிற்று. இந்த ஆண்டு இறுதிக்குள் பசுமைப் பரப்பினை 15% அதிகரிப்பது என்று உறுதி பூண்டுள்ளோம்.

இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, 'நாம் அனைவரும் ஆளுக்கு ஒரு மரம் நட்டு அதனை பராமரிக்க வேண்டும என்று கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com