11 லட்சம் பான் அட்டைகள் நீக்கம்: உங்கள் பான் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள..

இந்தியாவில் சுமார் 11 லட்சம் போலியான பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு  தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.
11 லட்சம் பான் அட்டைகள் நீக்கம்: உங்கள் பான் அட்டை செயல்பாட்டில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள..


புது தில்லி:  இந்தியாவில் சுமார் 11 லட்சம் போலியான பான் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு  தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கூறியுள்ளார்.

மத்திய நிதித் துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவில் போலியான மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை ஒருவர் வைத்திருப்பது போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு, 11,44,211 பான் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகளை வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் வருமான வரிச் சட்டம் 272பியின் படி ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

ஒரு வேளை, ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பான் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அதனை அவரே அரசிடம் திருப்பி அளித்திட வேண்டும்.

உங்கள் பான் அட்டை தற்போது செயல்பாட்டில் உள்ளதா அல்லது தவறுதலாக தகுதி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்...

http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அதில் சேவைகள் (services) என்ற பிரிவில் 'Know Your PAN'  என்பதை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் தகவல்களை அளிக்க வேண்டும்.

பான் அட்டை வாங்குவதற்கு கொடுத்த செல்போன் எண்ணை இதில் பதிவு செய்ய வேண்டும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, சப்மிட் செய்ததும், உங்கள் செல்பேன் எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.

அதையும் பதிவு செய்த பிறகு வேலிடேட் என்ற பட்டனை கிளிக் செய்யவும். இறுதியில், உங்கள் பான் அட்டையின் எண் மற்றும் அதன் அருகே ஆக்டிப் அல்லது நாட் ஆக்டிவ் என்று பதிவு செய்யப்பட்டிருக்கும். அதைக் கொண்டு உங்கள் பான் அட்டையின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com