காஷ்மீர்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் உள்பட 6 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்ற 5 பயங்கரவாதிகள் உள்பட 6 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மாச்சில் செக்டர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றதை இந்திய ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து, இந்திய ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு நடத்திய தாக்குதலில், 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் இந்திய ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதன்மூலம், அப்பகுதியில் நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. தொடர்ந்து அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
முன்னதாக, புல்வாமா மாவட்டம், சம்பூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்புப் படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் திருப்பிச் சுட்டனர்.
இதைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்தச் சண்டையின் முடிவில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். எஞ்சிய பயங்கரவாதிகள் தப்பியோடி விட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதியின் பெயர் உமர் ஆகும். பாகிஸ்தானைச் சேர்ந்த அவர், லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் அபு இஸ்மாயில் தலைமையின்கீழ் குழுவைச் சேர்ந்தவர். அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற வாகனம் மீது கடந்த மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் ஆவார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com