பாஜகவுடன் அணிசேர்ந்ததன் மூலம் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் நிதீஷ்

பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பாஜகவுடன் அணிசேர்ந்ததன் மூலம் அரசியல் ரீதியில் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் விமர்சித்துள்ளார்.
பாஜகவுடன் அணிசேர்ந்ததன் மூலம் அரசியல் தற்கொலை செய்து கொண்டார் நிதீஷ்

பிகார் முதல்வர் நிதீஷ்குமார் பாஜகவுடன் அணிசேர்ந்ததன் மூலம் அரசியல் ரீதியில் தற்கொலை செய்து கொண்டு விட்டார் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது:
மகா கூட்டணியில் இருந்து நிதீஷ்குமார் விலகி விட்டார். இனி நாட்டில் உள்ள எந்தக் கட்சியும் அவரை நம்பாது. அரசியல்ரீதியில் அவரது சகாப்தம் முடிந்து விட்டது. வரும் 2019இல் நடைபெற உள்ள அடுத்த மக்களவைத் தேர்தலில் நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இப்போதுள்ள 2 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. பாஜகவும் அதன் கூட்டணியும் பிகாரில் தற்போது வென்றுள்ள இடங்களை நிதீஷுக்கு விட்டுக் கொடுக்காது. நான் எப்போதுமே நிதீஷை என்னை விட முதிர்ச்சியானவர் என்று கருதி வந்துள்ளேன். ஆனால் அது தவறு என்று அவர் நிரூபித்து விட்டார்.
எங்கள் குடும்பத்திற்கும் மணல் கொள்ளைக் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதாக பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நாங்கள் பாட்னாவில் வரும் 27-ஆம் தேதி நடத்தவுள்ள பேரணிக்கு மணல் கொள்ளைக் கும்பல்தான் நிதியுதவி செய்வதாக அவர் கூறியிருப்பதும் தவறானது. அந்தப் பேரணிக்காக நாங்கள் ஒரு பைசாவைக் கூட வாங்கவில்லை. அவர்கள் (பாஜகவினர்) எங்களுக்கு எதிராக கதைகளைப் புனையட்டும். அவற்றை 27ஆம் தேதி நடைபெறும் பேரணியில் அம்பலப்படுத்துவோம்.
ஹரியாணாவில் பாஜக மாநிலத் தலைவரின் மகன் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்துள்ளார். நாடு முழுவதும் பாஜகவின் காட்டாட்சி நடைபெறுகிறது.
பிகார் மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், பிகார் முழுவதும் எங்கள் கட்சியின் பிரசாரத்தை புதன்கிழமை முதல் முன்னெடுப்பார். அவர் மோதிஹாரி முதல் கிழக்கு சம்பாரண் வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்வார் என்றார் லாலு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com