உத்தரப்பிரதேசம்: விரைவு ரயிலில் இருந்து வெடிகுண்டு கண்டெடுப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே விரைவு ரயிலில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கவைக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம்: விரைவு ரயிலில் இருந்து வெடிகுண்டு கண்டெடுப்பு


அமேதி: உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே விரைவு ரயிலில் இருந்து வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கவைக்கப்பட்டது.

இன்று காலை ஹௌராவில் இருந்து அமிருதசரஸ் வரை செல்லும் விரைவு ரயில் நள்ளிரவு 1.14 மணியளவில், ரயில் பெட்டியில் இருந்த கழிவறையில் மர்ம பொருள் இருப்பதாக பயணிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

உடனடியாக மாநில அரசின் ரயில்வே காவல்துறையைச் சேர்ந்த வீரர்கள் விரைந்து வந்து அந்த மர்ம பொருளை கைப்பற்றினர்.

அக்பர்கஞ் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட அந்த ரயிலில் இருந்து எடுக்கப்பட்ட மர்ம பொருளை பரிசோதித்ததில், அதில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு இருந்தது தெரிய வந்ததை அடுத்து உடனடியாக அது செயலிழக்க வைக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டுடன், ஒரு கடிதமும் இருந்தது. அதில், லஷ்கர் இ தயீபா பயங்கரவாதி அபு துஜானாவின் மரணத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று ஹிந்தியில் எழுதப்பட்டிருந்தது.

உடனடியாக ரயில் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த வெடிகுண்டை வைத்த நபர் யார் என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com