பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: மம்தா சூளுரை

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்தார்.
பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: மம்தா சூளுரை

பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி சூளுரைத்தார்.
மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட 'வெள்ளையனே வெளியேறு இயக்கம்' உருவாகியதன் 75-ஆவது ஆண்டு விழா, திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேதினிபூரில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எண்ணற்ற இனங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள், கலாசாரங்கள் இருந்தபோதிலும், இந்தியர் என்ற ஒருமைப்பாட்டுடன் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இந்தியாவின் சிறப்பம்சமான இந்தப் பன்முகத்தன்மையையே சிதைக்கும் நோக்கத்தில் பாஜக செயல்பட்டு வருகிறது.
நாட்டு மக்களை இன ரீதியாகவும், மத ரீதியாகவும் பிளவுபடுத்தி துண்டாடுவதே பாஜகவின் தலையாயக் கொள்கையாக உள்ளது.
பாஜக ஆட்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத ரீதியான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன.
இந்தியாவின் அடித்தளமான ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகியவற்றுக்கு பாஜக ஆட்சியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெறுப்புணர்வு, வகுப்புவாதம் ஆகியவற்றை பரப்பும் பாஜகவை நாட்டை விட்டே விரட்டியடிக்க வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது.எதிர்வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜகவுக்கு தக்க பாடத்தை நாம் புகட்ட வேண்டும்.
அந்தத் தேர்தலில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்வதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும்.
இதற்கான முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் ஈடுபடும்.
பாஜக அல்லாத இந்தியாவை உருவாக்குவதே நமது லட்சியமாகும். மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதுவரை நாம் போராடுவோம் என்றார் மம்தா பானர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com