ராகுலின் கார் மீது வீசப்பட்ட கல் ராஜஸ்தானிலிருந்து எடுத்துவரப்பட்டது: குஜராத் அமைச்சர்

குஜராத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் கார் மீது மர்ம நபர்கள் வீசிய கல் ராஜஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டது என்று அந்த மாநில சுகாதாரத் துறை

குஜராத்தில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட வந்தபோது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலின் கார் மீது மர்ம நபர்கள் வீசிய கல் ராஜஸ்தானிலிருந்து எடுத்து வரப்பட்டது என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சங்கர் சௌதரி தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பனஸ்கந்தா, பதான் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சட்டப் பேரவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அப்போது, அமைச்சர் சங்கர் சௌதரி கூறியதாவது:
தனேராவில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி சென்றபோது, அவரது கார் மீது மர்ம நபர்கள் வீசிய கல் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம். ஏனென்றால், அதுபோன்ற கல் வகை தனேராவில் கிடையாது. இதன் பின்னணியில் அரசியல் சதி அடங்கியிருக்கிறது என்றார் சங்கர் சௌதரி.
இந்தத் தாக்குதலில் ராகுல் காந்தி காயம் ஏதுமின்றி தப்பினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயேஷ் டார்ஜி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் பாஜக பிரமுகர் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com