ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் 132 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் முக்கிய பயங்கரவாதிகள் 6 பேர் உள்பட 132 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு வட்டாரத்

ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் முக்கிய பயங்கரவாதிகள் 6 பேர் உள்பட 132 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகின்றனர். அவர்கள் காஷ்மீரில் உள்ள முக்கிய பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து அதன்படி பயங்கரவாதிகளை வீழ்த்துவதற்கான நடவடிக்கை
களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 7 மாதங்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கையானது கடந்த 7 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் அதிகமாகும். இந்த ஆண்டில் இதுவரை பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாருடன் நடைபெற்ற மோதல்களில் 132 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் கடந்த மாத (ஜூலை) இறுதி வரை 115 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பின் இம்மாதம் 9-ஆம் தேதி வரை 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 லஷ்கர் பயங்கரவாதிகள், 37 ஹிஸ்புல் பயங்கரவாதிகள், அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜாகிர் மூசா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், மேலும் அடையாளம் காணப்படாத 54 பயங்கரவாதிகள் ஆகியோர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய பகுதிகளில் கொல்லப்பட்டனர்.
இந்தக் காலகட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளின் 6 முக்கிய நிர்வாகிகளும் அடங்குவர்.
அவர்களில் ஒருவரான லஷ்கர் அமைப்பின் முக்கிய நிர்வாகியான அபு துஜானா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இந்தியாவில் பல்வேறு தாக்குதல்கள் தொடர்பாகத் தேடப்பட்டு வந்தார். இவரை புல்வாமா மாவட்டத்தின் ஹக்ரிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடந்த 1-ஆம் தேதி சுட்டுக் கொன்றனர்.
முன்னதாக, ஜூலை 1-ஆம் தேதியன்று லஷ்கர் அமைப்பின் முக்கிய நிர்வாகியான பஷீர் லஷ்கரியும், மற்றொரு பயங்கரவாதியான ஆஸாத் மாலிக்கும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
அதற்கு முன்பு, மே 28-ஆம் தேதியன்று ஹிஸ்புல் அமைப்பின் மூத்த பயங்கரவாதியான சப்ஜார் அகமது பட் கொல்லப்பட்டார்.
அதேபோல் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்த மூத்த பயங்கரவாதியான சாஜத் கில்காரை பாதுகாப்புப் படையினர் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி சுட்டு வீழ்த்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைககள் அனைத்தும் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்பும் பாகிஸ்தான் மற்றும் அதன் ஏஜெண்டுகளின் திட்டமிட்ட முயற்சிகளைத் தோற்கடித்தன. இந்த நடவடிக்கைகள் தொடரும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com