பாஜகவை எதிர்கொள்ள சோனியா புதிய வியூகம்

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்தியை வகுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை
பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக தில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகத்தில் வெள்ளிக்கிழமை கலந்தாலோசித்த பின் வெளியே வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா,
பாஜகவை எதிர்கொள்வது தொடர்பாக தில்லியில் உள்ள நாடாளுமன்ற நூலகத்தில் வெள்ளிக்கிழமை கலந்தாலோசித்த பின் வெளியே வரும் காங்கிரஸ் தலைவர் சோனியா,

மத்தியில் ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கான உத்தியை வகுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தில்லியில் வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும், இடதுசாரிக் கட்சித்தலைவர்களும் பங்கேற்றனர். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் அதிருப்தி எம்.பி.யான அலி அன்வர் அன்சாரியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் பிகாரில் பாஜகவுடன் தன் கட்சி கூட்டணி அமைத்துள்ளதை எதிர்த்து வருகிறார். ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக, சமாஜவாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாஜகவுக்கும் மாற்று சக்தி ஒன்றை எதிர்க்கட்சிகள் கட்டமைக்க வேண்டியுள்ளது. திறன்வாய்ந்த உத்தியை வகுப்பதன் மூலமும், விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட மக்களுக்கு ஆதரவான விவகாரங்களை எழுப்புவதன் மூலமும் இதைச் செய்ய முடியும்.
இவை அனைத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். இது தொடர்பாக தொடர்ந்து கலந்தாலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய சிறிய குழு ஒன்று அமைக்கப்படும் என்றார் அவர்.
தேசியவாத காங்கிரஸ் புறக்கணிப்பு: இதனிடையே, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் கூறியதாவது:
குஜராத்தில் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை ஆதரித்து வாக்களிக்குமாறு எங்கள் கட்சியின் 3 எம்எல்ஏக்களுக்கும் நாங்கள் கொறடா உத்தரவையே பிறப்பித்தோம். அப்படியிருந்தும் தனது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
அதனால்தான் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணிக்க நாங்கள் முடிவு செய்தோம் என்றார் பிரஃபுல் படேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com