மாணவர் சேர்க்கை குறைந்துவிட்ட பொறியியல் கல்லூரிகளை மூட ஏஐசிடிஇ முடிவு

நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்து விட்ட பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் மாணவர் சேர்க்கை குறைந்து விட்ட பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) முடிவு செய்துள்ளது.
கல்வி தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு, தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏஐசிடிஇ-யின் தலைவர் அனில் டி.சஹஸ்ரபுத்தே பங்கேற்றுப் பேசியதாவது: நாடு முழுவதும் ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்று 10,361 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 30 லட்சம் மாணவர்களை சேர்க்க முடியும். ஆனால், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 27 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றில், கடந்த 5 ஆண்டுகளில் 30 சதவீதத்துக்கும் குறைவாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு முடிவு செய்திருக்கிறோம். அந்தக் கல்லூரிகள், அடுத்த ஆண்டில் இருந்து மூடப்படும்.
நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளின் தேவை குறைந்ததாலும், கல்வித் தரம் குறைந்து விட்டதாலும், கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, ஏஐசிடிஇ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
அதற்காக, மூடப்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வாழ்வியல் திறனை வளர்க்கவும், வாழ்வியல் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் பயிற்சி அளிப்பதில் ஏஐசிடிஇ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மாணவர்களின் மேம்பாட்டுக்காக தேசிய அளவிலான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com