அணுமின் உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் தற்போது 6,800 மெகாவாட்டாக உள்ள அணு மின்சார உற்பத்தியை இரண்டுக்கு பங்குக்கும் மேலாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய எரிசக்தி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்த
அணுமின் உற்பத்தியை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டம்

இந்தியாவில் தற்போது 6,800 மெகாவாட்டாக உள்ள அணு மின்சார உற்பத்தியை இரண்டுக்கு பங்குக்கும் மேலாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக மத்திய எரிசக்தி மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் அணு மின்சார உற்பத்தியை சுமார் 7,000 மெகாவாட் அதிகரிப்பதற்கான திட்டமிடலை அண்மையில் நாங்கள் தொடங்கியுள்ளோம்.
முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் இந்த உற்பதித் திறன் அதிகரிப்பு நடைபெறும்.
ஒவ்வொன்றும் 700 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 உற்பத்திப் பிரிவுகளை கூடுதலாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட 10 அணு உலைகளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மே மாதமே ஒப்புதல் வழங்கியுள்ளது.
அணு மின்சார உற்பத்தி இரட்டிப்பாக்கப்பட்டாலும், இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் பிரதான ஆதரமாக அணு மின்சக்தி ஆகாது. அணு மின்சாரம் தயாரிப்பதற்கு ஆகும் கூடுதல் செலவே அதற்குக் காரணம்.
அணு மின்சாரம் தயாரிக்கும்போது கரியமில வாயு வெளியேற்றப்படுவதில்லை என்பதாலும், சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படுகிறது என்பதாலும் மட்டுமே மத்திய அரசு அணு மின்சக்தியை ஊக்குவிக்கிறது.
சூரிய மின்சாரத்தை பகல் நேரங்களில் மட்டுமே பெற முடியும்; காற்றாலைகளும் வேகமாக காற்று வீசும் பருவங்களில் மட்டுமே மின்சாரத்தைத் தயாரிக்க முடியும்.
ஆனால், 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் எரிசக்தியே நமது உண்மையான தேவை ஆகும்.
நீர் மின்சாரமும், அணு மின்சாரமும் எப்போதும் கிடைக்குமென்றாலும், அவற்றின் உற்பத்தி செலவு அதிகம்.
புகை மாசுபாடு காரணமாக சூரியனின் வெப்பத்திலிருந்து பூமியைப் பாதுகாக்கும் வளிமண்டலப் படலத்தில் துளை ஏற்பட்டு, உலக வெப்பமயமாதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுவது தவறு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதை ஏற்க முடியாது.
சில நாடுகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறினாலும், அந்த விவகாரத்தில் இந்தியா பொறுப்புடன் நடந்து கொள்கிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com