எல்லைப் பிரச்னையை திறம்படக் கையாளுகிறது இந்தியா: அமெரிக்க பேராசிரியர் பாராட்டு

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை திறம்பட கையாளுகிறது இந்தியா என்று அமெரிக்க கடற்படைப் போர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான எல்லைப் பிரச்னையை திறம்பட கையாளுகிறது இந்தியா என்று அமெரிக்க கடற்படைப் போர் பயிற்சிக் கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ஆனால் சீனா இந்த விவகாரத்தில் சிறுபிள்ளைத்தனமான செயல்பாட்டையே வெளிக்காட்டுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
டோகாலா எல்லைப் பிரச்னையை முன்னிறுத்தி இந்தியா } சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், இத்தகைய கருத்தை அமெரிக்க பேராசிரியர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, பூடான் மற்றும் சீனாவின் எல்லையாக விளங்கும் டோகா லாவில் அத்துமீறி சாலை அமைத்து வரும் சீனப் படைகள், எல்லை தாண்டி வருவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிக்கிம் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அண்மையில் நுழைந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும், அந்நாட்டுக்கும் இடையே போர்ச் சூழல் எழுந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்புப் பணிக்காக கூடுதல் வீரர்களை டோகா லா எல்லையில் இந்தியா குவித்துள்ளது.
இந்த சூழலில் இது தொடர்பாக அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் ஆர். ஹோம்ஸ் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லைப் பிரச்னையை இந்தியா சிறப்பாகக் கையாண்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பண்பட்ட வல்லாதிக்க சக்தியைப் போன்று இந்தியா செயல்படுகிறது. அதே சீனாவை எடுத்துக் கொண்டால் சிறுபிள்ளைத்தனமான செயல்பாடுகளைத் தான் வெளிக்காட்டுகிறது.
இந்தியாவோ, பிரச்னையைக் கண்டு பின்வாங்கவுமில்லை; அதேநேரத்தில் சீனாவைப் போன்று தேவையற்ற கருத்துகளைக் கூறவுமில்லை என்றார் அவர்.
இதனிடையே, இந்தப் பிரச்னைக்கு இந்தியாவும், சீனாவும் இணைந்து தீர்வு காண முயல வேண்டும் என்று அமெரிக்க பசிபிக் பாதுகாப்புப் படை தளபதி ஹாரி பி. ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
ராணுவ அதிகாரிகள் கூட்டம்: இதற்கு நடுவே இந்திய } சீன ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கொடி அமர்வு கூட்டம் சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்றது. ராணுவ மேஜர் பணி நிலையிலான அதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர்.
இரு நாட்டுப் படைகளையும் வாபஸ் பெற்றால் மட்டுமே இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண முடியும் என்று கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. ஆனால், சீனா தரப்பிலோ, இந்தியப் படைகள் உடனடியாக திரும்பிச் செல்ல வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் விளைவாக இந்த விவகாரத்தில் சுமுக உடன்பாடு எதுவும் அந்தக் கூட்டத்தில் எட்டப்படவில்லை. இதைத் தவிர எல்லையில் நிலவும் வேறு சில பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com