ஜம்மு}காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, சனிக்கிழமை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால், ஆள் அரவமற்ற சாலையொன்றில் சிறுமியுடன் நடந்து செல்லும் பெண்.
ஜம்மு}காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, சனிக்கிழமை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததால், ஆள் அரவமற்ற சாலையொன்றில் சிறுமியுடன் நடந்து செல்லும் பெண்.

காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு நிலை பாதிப்பு

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம்

ஜம்மு}காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து, காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
அரசமைப்புச் சட்டத்தின் 370}ஆவது பிரிவு, ஜம்மு} காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது.
இதேபோல், அரசமைப்புச் சட்டத்தின் 35}ஏ பிரிவின்படி, பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நிலம் உள்ளிட்ட அசையாச் சொத்துகளை வாங்க முடியாது. அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவும் முடியாது.
இந்தச் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி, தன்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக, மூன்று வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஜம்மு}காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய மத்திய அரசு முயலுவதாகக் கூறி, காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் நடவடிக்கை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த மாநிலத்தின் மக்கள்தொகை விகிதத்தை மாற்றும் முயற்சி என்றும் பிரிவினைவாத அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
போராட்டம் காரணமாக, பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன. அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
காஷ்மீரில் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சில தனியார் வாகங்களை மட்டுமே சாலைகளில் காண முடிந்தது. வன்முறை மூள்வதற்கு வாய்ப்புள்ள மகாராஜ்கஞ்ச், நெüஹட்டா, கன்யார், ரைனவாரி ஆகிய காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com