மதுவுடன் புகையிலைப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்: சத்ருகன் சின்ஹா

பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது போல், புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
மதுவுடன் புகையிலைப் பொருள்களுக்கும் தடை விதிக்க வேண்டும்: சத்ருகன் சின்ஹா

பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது போல், புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பிகார் மாநிலம் கிசான்கஞ்ச் நகரில் புற்றுநோய் விழிப்புணர்வு, ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்துக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஷகீல் அகமது கான், சுயேச்சை எம்எல்சி தேவேஷ் சந்த் தாகுர், பிரபல புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஜே.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில்
சத்ருகன் சின்ஹா பேசியதாவது:
பிகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது மிகவும் பாராட்டப்படுகிறது.
மதுவகைகள் மீதான தடையானது புகையிலைப் பொருள்களுக்கும் நீட்டிக்கப்பட்டால் அது, புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களைத் தடுப்பதன் மூலம் மனிதர்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
சிகரெட், கைனி, குட்கா போன்ற புகையிலைப் பொருள்களின் நுகர்வால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. வரும் 2020-ஆம் ஆண்டுக்குகள் புற்றுநோய்தான் உலகிலேயே மனிதர்களுக்கான மிகப்பெரிய உயிர்க்கொல்லி நோயாக இருக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறதது. இந்தியாவில் வாய்ப் புற்றுநோய் பெருமளவில் காணப்படுகிறது. குறிப்பாக நம் நாட்டில் பிகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இதன் அளவு அதிகமாக உள்ளது.
இங்கு (கிசான்கஞ்ச்) அமைக்கப்பட உள்ளதைப் போல், அருகில் உள்ள எனது மக்களவைத் தொகுதியான பாட்னா சாஹேப்பில் அடங்கும் பக்தியார்பூர் மற்றும் தனியாவா பகுதியில் புற்றுநோய் ஆய்வு மையம் ஒன்றை அமைக்க நான் முயற்சியெடுப்பேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com