கோரக்பூர் விமானநிலையம் மூடப்பட்டது: விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

உத்தரப்பிரதேசத்தில் உள்ள விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
கோரக்பூர் விமானநிலையம் மூடப்பட்டது: விமானங்கள் ரத்து செய்யப்பட்டன

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 தினங்களாக அதிகப்படியான மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி சாலை முழுவதும் வெள்ளநீர் செல்கிறது. அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். 

குறிப்பாக வடக்கு உத்தரப்பிரதேசத்தில் அதிகளவில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கோரக்பூரில் 180 மி.மீ., மழை பதிவானது.

இந்நிலையில், கோரக்பூர் விமானநிலையம் இந்தத் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக திங்கட்கிழமை மூடப்பட்டது. 

அங்கிருந்து புறப்படும் மற்றும் வந்துசேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் பீகார் மாநித்திலும் கனமழை மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் பாயும் நதிகளில் அதிகப்படியான வெள்ளம் ஏற்பட்டது. 

மேலும், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள லாகிம்பூர் கேரி, பஹ்ராய்ச், குஷிநகர், கோரக்பூர், பிஜ்நார் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சுபால், பாட்னா, கயா, முஸாஃபர்பூர், சப்ரா ஆகிய மாவட்டங்களில் குறைந்தபட்ச மழையே பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com