அகமது படேலின் வெற்றி வெறும் வெற்றியல்ல.. காங்கிரஸ் கட்சிக்கு அவசியமான 'யு' டர்ன்

அகமது படேலின் வெற்றி வெறும் வெற்றியல்ல.. காங்கிரஸ் கட்சிக்கு அவசியமான 'யு' டர்ன்

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மிகப்பெறும் போராட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.


புது தில்லி: குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் மிகப்பெறும் போராட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.

ஒரே ஒரு மாநிலங்களவைப் பதவிக்காக மத்தியில் ஆளும் பாஜக, பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளை செய்தும் அது பலனளிக்காமல், இறுதியில் அகமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இது வெறும் வெற்றியல்ல. காங்கிரஸ் கட்சிக்கு இப்போது என்னத் தேவையோ? அது. அடுத்து தனது எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தேவையான உந்து சக்தி என அனைத்துமாகவே பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் அரசியல் செயலர் அகமது பட்டேல், குஜராத் மாநிலங்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று, தொடர் தோல்விகளைச் சந்தித்து உற்சாகமிழந்த நிலையில் இருந்த காங்கிரஸ் தொண்டர்களின் வெற்றிக் கொண்டாட்டத்துக்குக் காரணமாக இருந்தார்.

மேலும், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் குஜராத் மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது இப்போது மிகவும் அடிப்படையான தேவையாக இருந்தது.

நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய உற்சாகமாக இந்த வெற்றி அமைந்ததாக குஜராத் மாநில பொறுப்பாளர் அஷோக் கேஹ்லட் கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் பாஜக மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. அதன் நேர்மையே மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிட்டது. இந்த வெற்றியில் எந்த கேள்வியையும் பாஜக எழுப்பவும் முடியாது. ஏன் என்றால், வாக்கு எண்ணிக்கையின் போது அமித்ஷாவே குஜராத்துக்கு வந்து கூடவே இருந்து வாக்கு எண்ணிக்கையை கவனித்தார் என்று கூறினார்.

இந்த வெற்றியின் மூலம், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியினர் வரும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை வழி நடத்த மிக மூத்த, அனுபவம் வாய்ந்த அகமது பட்டேலும், இளைஞர்களை கவர, துணைத் தலைவர் ராகுலும் இருப்பது கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெற்றி பெற்றுள்ளது. அதுவும், பாஜகவின் அனைத்து பகீரத முயற்சிகளுக்குப் பிறகு. இது கட்சிக்கு தற்போது மிகவும் அவசியமான ஒன்று. இது வெறும் வெற்றி மட்டும் அல்ல என்றுதான் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com