அக்டோபரில் இந்தியா- ரஷியா போர்ப் பயிற்சி

இந்தியா-ரஷியா இணைந்து அக்டோபரில் பிரமாண்டமான போர்ப் பயிற்சியை நடத்த இருக்கிறது. இதில் இருநாடுகளின் முப்படைகளும் பங்கேற்க இருக்கின்றன.

இந்தியா-ரஷியா இணைந்து அக்டோபரில் பிரமாண்டமான போர்ப் பயிற்சியை நடத்த இருக்கிறது. இதில் இருநாடுகளின் முப்படைகளும் பங்கேற்க இருக்கின்றன.

இந்திய-ரஷிய முப்படைகள் இதுவரை தனித்தனியாக பலமுறை இதுபோன்ற பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். ஆனால் இரு நாட்டின் முப்படைகள் இணைந்து பயிற்சி மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். இரு நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இந்திரா பயிற்சி என்று இந்தப் போர்ப் பயிற்சிக்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. ரஷியாவின் 3 வெவ்வேறு இடங்களில் அக்டோபர் 19 முதல் 29-ம் தேதி வரை இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முப்படைகளும் வெளிநாடு ஒன்றுடன் இணைந்து போர்ப் பயிற்சி மேற்கொள்வதும் இதுவே முதல்முறையாகும்.
மொத்தம் 350 இந்திய ராணுவ வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். இது தவிர கடற்படை, விமானப்படை வீரர்களும் அதிக அளவில் இந்தக் கூட்டு போர்ப் பயிற்சியில் ஈடுபட இருக்கின்றனர்.
டோக்லாம் விவகாரத்தால் இந்திய-சீன எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலும் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் நடைபெறவுள்ள இப்பயிற்சி கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இருநாடுகளின் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க மோடியும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் ஒப்புக் கொண்டனர். இதன்படி இருநாடுகளின் முப்படைகளும் இணைந்து போர்ப் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com