கேரளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை எதிர்க்கிறோம்

கேரளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை எதிர்ப்பதாக அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பி. கோபாலன் குட்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை எதிர்ப்பதாக அந்த மாநில ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் பி. கோபாலன் குட்டி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கேரளத்தில் ஆர்எஸ்எஸ்}பாஜக தொண்டர்கள் அடுத்தடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் கொலைச் செய்யப்பட்டு வரும் நிலையில், கோபாலன் குட்டி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேசியபோது, அவர் மேலும் கூறியதாவது:
கேரளத்தில் வன்முறைச் சம்பவம் நிகழ்வதை தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விரும்புகிறார். ஆனால், எப்போதெல்லாம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ்}பாஜகவினர் மீது அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். பேச்சுவார்த்தை நடத்தப்படும் நேரத்தை அடுத்த தாக்குதலுக்கு அவர்கள் பயன்படுத்துகின்றனர். அந்த நேரத்தில், தங்களது அடுத்த தாக்குதலுக்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்கின்றனர்.
இதுபோன்று 2 அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்தபின்னர்தான், கண்ணணூரில் பாஜக தொண்டர் சந்தோஷ் என்பவர் கொல்லப்பட்டார். இதேபோல், ராஜேஷ் என்ற ஆர்எஸ்எஸ் தொண்டரும் கொலை செய்யப்பட்டார்.
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்}பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தில், பாஜக தலைமை கவனம் செலுத்த வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தப்பட்டது. ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதை ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜகவும் எதிர்க்கின்றன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைக் கலைப்பது நல்லதல்ல.
அதேநேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்படும்போது, தங்களை தற்காத்து கொள்ள ஆர்எஸ்எஸ்}பாஜக தொண்டர்கள் எதிர்க்க வேண்டியுள்ளது. திட்டமிட்டு பதில் தாக்குதல் நடத்துவது ஒரு அமைப்புக்கு நல்லதல்ல. ஆனால். சில சம்பவங்கள் நடக்கும்போது, அதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பது அவசியமாகும். இதனால், ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் மிகவும் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். எந்த இடத்தில் இருந்தும் எப்படி வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தியுள்ளோம் என்றார் கோபாலன் குட்டி மாஸ்டர்.
கேரளத்தில் அண்மைக் காலமாக ஆர்எஸ்எஸ்}பாஜக தொண்டர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் அடுத்தடுத்து 2 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து, முதல்வர் பினராயி விஜயனை நேரில் அழைத்து ஆளுநர் பி.சதாசிவம் விளக்கம் கேட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com