சுதந்திர தினம்: ஜம்மு-காஷ்மீரில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்துள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் ஜம்மு பிராந்தியத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் செய்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கோடைகாலத் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. விழாவில் முதல்வர் மெஹபூபா முஃப்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற உள்ளார்.
இந்த மைதானத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெருமளவிலான போலீஸாரும், சிஆர்பிஎஃப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளன. நகரிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் பல்வேறு இடங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனச் சோதனை நடத்தப்படுகிறது. வாகனங்களில் வருவோர் உடலைத் தழுவி செய்யப்படும் சோதனைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சுதந்திர தின விழாவைச் சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சிகளை மேற்கொண்டால் அவற்றை முறியடிக்கும் வகையில் ஸ்ரீநகரில் உள்ள அரசுக் கட்டடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், காஷ்மீரின் மற்ற மாவட்டங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜம்மு பிராந்தியத்தில் ஏற்பாடுகள்: ஜம்மு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறிய மைதானத்தில் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. அங்கு துணை முதல்வர் நிர்மல் சிங் மூவண்ணக் கொடியை ஏற்றவுள்ளார். இவ்விழாவுக்கான முன்னேற்பாடுகள், கடந்த ஒரு வார காலமாக அரசு உயரதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்
களில் முடிவு செய்யப்பட்டன.
அப்போது, சர்வதேச எல்லை மற்றும் கடந்த மூன்று மாதங்களாகப் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நடைபெறும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு ஆகியவற்றையொட்டிய பகுதிகளில் நிலவும் சூழலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
ஆலோசனைக் கூட்டங்களின்போது, மத்திய, மாநில உளவு அமைப்புகள் விரிவான மதிப்பீட்டை அளித்தன. அதைத் தொடர்ந்து, ஜம்மு பிராந்தியத்தில் சுதந்திர தின விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது .
சுதந்திர தின விழாவில் நடத்தப்பட உள்ள காவல்துறை அணிவகுப்பு, இதற்காக மைதானத்தைத் தயார்படுத்துவது, விழா நடைபெறும் இடங்களில் சதிச் செயல்களைத் தடுப்பதற்கான சோதனைகள், தடுப்புகளை அமைத்தல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஏற்பாடுகள், தீயணைப்புச் சேவைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அரசுக் கட்டடங்கள், ராணுவ அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பதற்றமான பகுதகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com