பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் வெள்ளப் பெருக்கு: லட்சக்கணக்கானோர் பாதிப்பு

பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஸ்ஸாமின் நகாவ்ன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவசாஸ்த்ரா கிராமத்தில் இருந்து மக்களை படகு மூலம் பத்திரமாக மீட்கும் ராணுவ வீரர்கள். நாள்: ஞாயிற்றுக்கிழமை.
அஸ்ஸாமின் நகாவ்ன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவசாஸ்த்ரா கிராமத்தில் இருந்து மக்களை படகு மூலம் பத்திரமாக மீட்கும் ராணுவ வீரர்கள். நாள்: ஞாயிற்றுக்கிழமை.

பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3 மூன்று தினங்களாக பெருமழை பெய்து வருகிறது. அதன் விளைவாக, நேபாளத்தையொட்டிய பிகார் மாநிலத்தின் சீமாஞ்சல் பகுதியில் கடந்த 24 மணிநேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. அடுத்த சில நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை காரணமாக பிகாரின் கிஷன்கஞ்ச், பூர்ணியா, அராரியா, கடிஹார் ஆகிய மாவட்டங்களில் மகாநந்தா, கங்காய் உள்ளிட்ட நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கிஷன்கஞ்ச் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.
வெள்ள நிவாரணம், மீட்புப் பணிகள் குறித்து நிதீஷ் குமாருடன், ராஜ்நாத் சிங் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, வெள்ளப் பாதிப்புகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்து ராஜ்நாத் சிங்கிடம் நிதீஷ் விளக்கமளித்தார்.
இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்டுள்ள ராஜ்நாத் சிங், "பிகார் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேட்லி ஆகியோருடன் தொலைபேசியில் பேசினேன். அவர்களிடம் வெள்ள நிலைமை குறித்து விளக்கினேன். அனைத்து உதவிகளையும் அளிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். பிகாரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்' என்று கூறியுள்ளார்.
அஸ்ஸாமில் மேலும் 10 பேர் பலி: இந்நிலையில், வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் பெய்து வரும் கன மழை காரணமாக பிரம்மபுத்திரா உள்ளிட்ட 11 நதிகளில் வெள்ளம் 15 இடங்களில் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. இதனால் 21 மாவட்டங்களில் சுமார் 22.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட மழை-வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து அஸ்ஸாமில் இந்த ஆண்டு மழை-வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட திப்ரூகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை முதல்வர் சர்வானந்த சோனோவால் பார்வையிட்டார். அவருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, வெள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்ததோடு, நிலைமையைக் கையாள்வதில் அஸ்ஸாம் அரசுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

பிகார் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் இருந்து தத்தளித்தபடி வெளியேறும் மக்கள்.


மேற்கு வங்கத்தில் ரயில் சேவை பாதிப்பு: இதனிடையே, மேற்கு வங்கத்தில் தொடர்ந்து நீடித்து வரும் கன மழை காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சியால்டா மற்றும் ஹெளராவில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரயில்கள்நடுவழியில் பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டு விட்டன.
சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடுவழியில் சிக்கியிருக்கும் பயணிகளுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தருமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com