முத்தலாக் விவாகரத்தை எதிர்த்து புதிய மனு: உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு மறுப்பு

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மும்முறை "தலாக்' சொல்லி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட புதிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு மறுத்து விட்டது.

முஸ்லிம் சமூகத்தில் பின்பற்றப்பட்டு வரும் மும்முறை "தலாக்' சொல்லி விவாகரத்து பெறும் நடைமுறையை எதிர்த்து தொடுக்கப்பட்ட புதிய மனுவை, உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு மறுத்து விட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதே பிரச்னைக்காக, புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.
முன்னதாக, குருதாஸ் மித்ரா என்பவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் செளமியா சக்ரவர்த்தி தாக்கல் செய்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முஸ்லிம் சமூகத்தினரிடையே, பாரம்பரியமாக, குலா, முபாரத் ஆகிய இரு வழிமுறைகளில் விவாகரத்து நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால், மும்முறை தலாக் சொல்வது, விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் சம்மதம் தெரிவிக்கும் நிக்கா ஹலாலா முறை, பலதார திருமணம் ஆகிய வழிகளில் விவகாரத்து நடைமுறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன. இவை, அரசமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 21-ஆவது பிரிவுகளின் கீழ் முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமைகள் சட்டத்துக்கு எதிரானதாகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தலாக் விவகாரத்துக்கு நடைமுறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள மனுக்களை கடந்த மே மாதம் 18-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com