வன்முறை: கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலை ரத்து செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, அந்தத் தேர்தலை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநகராட்சித் தேர்தல்களில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி, அந்தத் தேர்தலை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எனினும், வாக்குப் பதிவின்போது தங்களது கட்சியினர் வன்முறையில் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, நடந்த சம்பவங்களுக்கு பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுமே காரணம் என்று கூறியது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து கருத்து கூற தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. துர்காபூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பல்வேறு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு, வாகனங்களுக்குத் தீவைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸôர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், மேற்கு வங்க மாநிலப் பிரிவு காங்கிரஸ் கட்சித் தலைவருமான அப்துல் மனான் கூறியதாவது:
மாநகராட்சித் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையர் ஏ.கே. சிங் தவறிவிட்டார்.
அவர் இவ்வாறு நடந்து கொள்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே, கடந்த மே மாதம் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்களிலும் அவர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார். எனவே, அவர் உடனடியாகப் பதவியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
இந்தத் தேர்தலை திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஒரு கேலிக் கூத்தாக மாற்றி விட்டது என்றார் அவர்.
இதற்கிடையே, ஹால்தியா, புஷ்குரா, துர்காபூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ""வன்முறை நடைபெற்ற பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். எனினும், மாநிலத் தேர்தல் ஆணையர் நீக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. காரணம், ஆணையரை பதவி நீக்கம் செய்வது பிரச்னைக்கு உண்மையான தீர்வல்ல'' என்றார் அவர்.
தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் அரூப் பிஸ்வாஸ் கூறியதாவது: ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில் பாஜக}தான் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபட்டது. அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் துணை போனது என்றார் அவர்.
இதற்கிடையே, தேர்தலை முறையாக நடத்தத் தவறியாகக் கூறி, மாநில தேர்தல் ஆணையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com