வருமானவரித் துறையினரின் சோதனையின் பின்னணியில் அமித் ஷா: முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபடுவதன் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளார் என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.
வருமானவரித் துறையினரின் சோதனையின் பின்னணியில் அமித் ஷா: முதல்வர் சித்தராமையா

கர்நாடகத்தில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபடுவதன் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளார் என்று முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அண்மைக் காலமாக கர்நாடகத்தில் அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட பலரின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பின்னணியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளார். அவர் எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக இது போன்ற சோதனைகளை ஏவி விடுகிறார். இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் அஞ்ச மாட்டார்கள். அமித் ஷா 3 நாள் பயணமாக கர்நாடகம் வந்துள்ளார். அவர் பாஜகவை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அமித் ஷா மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியே பலமுறை கர்நாடகத்தில் பிரசாரம் செய்தாலும், பாஜக வெற்றி பெற முடியாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆட்சியை 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்வோம். மதங்கள், ஜாதிகளை பிளக்கும் பணியை பாஜகவினர் செய்கின்றனர். காங்கிரஸ் ஒருபோதும் மதம், ஜாதிகளை பிளவு படுத்தும் பணியில் ஈடுபடாது. அடுத்த முதல்வர் டி.கே.சிவக்குமார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜனார்த் தன பூஜாரி கூறியுள்ளார். இதனை சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களும், கட்சி மேலிடமும் முடிவு செய்வார்கள். எந்தவொரு முடிவு எடுக்கும் இடத்திலும் ஜனார்த்தன பூஜாரி இல்லை என்பதை அவர் மறந்துள்ளார் என்றார் சித்தராமையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com