ஹிமாசல் நிலச்சரிவில் சிக்கி 46 பேர் பலி

ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில், அங்கு நின்று கொண்டிருந்த 2 பேருந்துகள், 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்து புதையுண்டன.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் பேருந்து பயணி.
இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் பேருந்து பயணி.

ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதில், அங்கு நின்று கொண்டிருந்த 2 பேருந்துகள், 800 மீட்டர் பள்ளத்தில் விழுந்து புதையுண்டன. இந்த விபத்தில் 46 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, பேரிடர் மேலாண்மை சிறப்புச் செயலர் டி.டி.சர்மா, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஹிமாசலப் பிரதேச அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இரு பேருந்துகள், இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. ஒரு பேருந்து, மணாலியில் இருந்து ஜம்முவில் உள்ள கட்ராவுக்கும், மற்றொரு பேருந்து, மணாலியில் இருந்து சம்பாவுக்கும், பதான்கோட்-மண்டி தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தன.
கோத்புரி என்ற இடத்தில், தேநீர் இடைவேளைக்காக, இரு பேருந்துகளும் சனிக்கிழமை நள்ளிரவு நின்றன. அந்த நேரத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலையுடன் அந்த இரு பேருந்துகளும் 800 மீட்டர் வரை உருண்டு, பள்ளத்தில் விழுந்து புதையுண்டன.
இதில், ஒரு பேருந்து முற்றிலுமாக இடிபாடுகளில் புதைந்துவிட்டதால், அந்தப் பேருந்து புதைந்த இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மற்
றொரு பேருந்தின் சிதைந்த பாகங்கள், சாலையில் இருந்து ஒரு கி.மீ. தொ
லைவுக்கு அப்பால் கண்டெடுக்கப்பட்டன.
அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரில் இருந்து ராணுவ வீரர்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாகச் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காவல் துறையினர், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொட்டும் மழையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மத்திய சரக காவல் துறை ஐஜி, துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்தில் இருந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர் என்று பேரிடர் மேலாண்மை சிறப்புச் செயலர் டி.டி.சர்மா கூறினார்.
அந்த இரு பேருந்துகளிலும் 50 பேர் வரை பயணம் செய்திருக்கலாம் என்று தெரிகிறது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.எஸ்.பாலி கூறினார்.
இதனிடையே, ஜம்முவுக்குப் புறப்பட்டுச் சென்ற பேருந்தில் 8 பயணிகளும், சம்பாவுக்குச் சென்ற பேருந்தில் 47 பேரும் பயணம் செய்ததாக, காவல் துறை டிஜிபி சோமேஷ் கோயல் கூறினார்.
ஜம்மு பேருந்தில் பயணம் செய்த 8 பேரில், 3 பேர் உயிரிழந்துவிட்டனர். காயத்துடன் மீட்கப்பட்ட 5 பேர் மண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 46 பேரின்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 23 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனிடையே, மேலும் நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறுத்தப்பட்டன. அவை திங்கள்கிழமை மீண்டும் தொடங்க உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com