71-ஆவது சுதந்திர தினம்: கூகுள் பிரத்தியேக டூடுல்!

71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரபல இணையதள தேடல் பக்கமான கூகுள், பிரத்தியேக டூடுல் போட்டு சிறப்பித்தது.
71-ஆவது சுதந்திர தினம்: கூகுள் பிரத்தியேக டூடுல்!

நாடு முழுவதும் இன்று 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணையதளத்தில் பிரபல தேடல் பக்கமான கூகுள், பிரத்தியேக டூடுல் போட்டு சிறப்பித்தது.

அதில், இந்திய நாடாளுமன்றம், அசோக சக்கரம், தேசியப் பறவை மயில் உள்ளிட்டவை இடம்பெற்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com