இந்தியா-சீனா இடையே போர் மூண்டால் 2 நாடுகளுக்கும் வெற்றி கிடைக்காது: தலாய் லாமா கருத்து

இந்தியா-சீனா இடையே போர் மூண்டால், இரு நாடுகளுக்குமே போரில் வெற்றி பெற முடியாது என்று திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா இடையே போர் மூண்டால் 2 நாடுகளுக்கும் வெற்றி கிடைக்காது: தலாய் லாமா கருத்து

இந்தியா-சீனா இடையே போர் மூண்டால், இரு நாடுகளுக்குமே போரில் வெற்றி பெற முடியாது என்று திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமா கருத்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தலாய்லாமா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதி தொடர்பாக இந்தியா, சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
தற்போதைய நிலவரப்படி, இந்தியா-சீனா இடையே போர் மூண்டால், பரஸ்பரம் இருநாடுகளும் பிற நாட்டை தோற்கடிக்க முடியாது. ஏனெனில், இரு நாடுகளுமே ராணுவ ரீதியில் சக்திமிக்க நாடுகளாகும். இரு நாடுகளும் அண்டை நாடுகள் என்ற முறையில் இணைந்து செயல்பட வேண்டும்.
எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு போன்ற சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். அதை பிரச்னையாக கருதக் கூடாது. கடந்த 1951ஆம் ஆண்டில் திபெத்திய அரசுக்கும், சீன மக்கள் குடியரசுக்கும் இடையே திபெத்தில் அமைதியை ஏற்படுத்துவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது சீனா மாறி விட்டது. புத்த மதத்தினரை அதிகம் கொண்ட நாடாக சீனா உள்ளது. இந்தியாவும், சீனாவும், மீண்டும் முன்பு எழுப்பிய முழக்கமான 'ஹிந்தி சீனி பாய் பாய்' என்ற முழக்கத்தை எழுப்ப வேண்டும். சீனா கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளும் சேதமாக இருந்தபோதிலும், அந்நாட்டு மக்கள் பெரும்பாலானோரால் புத்தமதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்பு, தலாய்லாமா என்பவர், திபெத்திய அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மத நடவடிக்கைகளுக்கு தலைவராக இருந்தார். 2011ஆம் ஆண்டில், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்றார் தலாய்லாமா.
சிக்கிம் எல்லையில் இருக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டதை இந்தியா கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி தடுத்து நிறுத்தியது. இதையடுத்து, இருதரப்பினருக்கும் அப்பகுதியில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாட்டு படைகளும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால், போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com