அம்மாவா-இந்திராவா! கேன்டீனா-கேம்பைனா! பாவம் ராகுலே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு

கர்நாடக மாநிலத்தில் மலிவு விலை உணவகம் திறப்பு நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலின் பேச்சு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அம்மாவா-இந்திராவா! கேன்டீனா-கேம்பைனா! பாவம் ராகுலே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, மார்ச் 15-ந் தேதி அம்மாநிலம் முழுவதும் மலிவு விலை உணவகங்களை திறக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனால் அம்மாநிலம் முழுவதும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தம் 101 மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் ரூ.5-க்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய, இரவு உணவு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் இந்த மலிவு விலை உணவகங்களுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திரா கேன்டீன் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதனை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், திறந்து வைத்தார். பெங்களூரு வந்த ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா முன்னிலையில் இந்த திட்டத்தை துவங்கினார். 

இதையடுத்து ராகுல் பேசியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, இந்த மலிவு விலை உணவக திட்டத்தை அமல்படுத்தியது பெருமைக்குரியது. யாரும் இனி பசியுடன் உறங்கச் செல்லக்கூடாது என்ற அவரது சிந்தனை பாராட்டுதலுக்குரியது. இந்த அம்மா கேன்டீன்களின் (இந்திரா கேன்டீன்) நோக்கமும் அதுதான். பெங்களூருவில் முதன்முறையாக இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது (தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதன்முறையாக துவங்கி நடைபெற்று வருகிறது). கூடிய விரைவில் பெங்களூருவி்ன் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். (கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் தான் பெங்களூரு) என்றார்.

அதுமட்டுமல்லாமல் கேன்டீன் என்ற வார்த்தையை பயன்படுத்தும் போது இருமுறை கேம்பைன் (பிரசாரம்) என்ற வார்த்தையை உபயோகித்தார். ஆனாலும், ரூ.5-க்கு சிற்றுண்டி மற்றும் ரூ.10-க்கு மதிய, இரவு உணவு வழங்கப்படும் என்பதை மட்டும் சரியாகச் சொன்னார்.

இவை அனைத்தும் நடந்தது துவக்க விழாவில் ராகுலின் அந்த 5 நிமிடப் பேச்சில்தான்.

முதன்முறையாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இதனை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது அவரது கனவு திட்டமாக இருந்தது. இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும்
செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com